கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதில் முன்னதாக கைது செய்யப்பட்ட அசாருதீன் உள்ளிட்ட ஐந்து பேரை NIA போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அடிப்படையில் மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய் முகவை அதிகாரிகள் செய்தார்கள். கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இரண்டு பேரை நேற்று கைது செய்துள்ளனர்.