Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவை உளவு பிரிவு உதவி ஆணையர் மாற்றம் …!!

கோவை மாநகர உளவுப் பிரிவு உதவியாளராக இருந்த முருகவேல் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு,  அவருக்கு பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல கோவை மாநகரில் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப் படுத்தப்பட்டுள்ளனர். உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்த்து நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகரத்தில் மட்டுமே முக்கியமான கோவில்கள், அதேபோல் மசூதிகள், சுங்க சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ரயில் நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு உதவியாளர் ஆணையராக இருந்த முருகவேல்,  கோவை மாநகர உளவு பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பை கூடுதலாகவும் கவனித்து வந்தார். தற்பொழுது முருகவேல் கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த பார்த்திபன்,  கோவை மாநகர உளவு பிரிவு ஆணையராக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |