Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்ட கோவை SP…… பணியிடை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை ….!!

பொள்ளாச்சி விசாரணையில்  மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை CBCID போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Image result for பொள்ளாச்சி பாலியல் சம்பவ

இந்நிலையில் ,  இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரம் உள்ளிட்டவற்றை கோவை  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் வெளியிட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கை கோவை SP முறையாக விசாரிக்கவில்லை என்றும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட  கோவை மாவட்ட SP மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் SP பாண்டியராஜ் தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |