கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர்.
இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் எதிரே வந்த ஒற்றை காட்டு யானை பலமாக தாக்கி தூக்கி வீசி கொன்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களில் இரண்டு பேரை யானை மிதித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.