மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வரும் சமயத்தில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்,
அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆறுதல் கூறாமல், ஆலோசனையும் அளிக்காமல் பிரச்சினை குறித்து அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.
பின் முடிவில் அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்யலாம் அல்லது இதில் என்னால் உதவ முடியாது என்றும் கூறி விடலாம். அவர்களை பேச விட்டு அவர்களுடன் நேரம் செலவிட்டதே அவர்களின் பாதி பாரத்தை குறைதீர்க்கும், பெரிய ஆறுதலாக இருக்கும்.