உடல் எடை, தொப்பை, சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் என பலவற்றிற்கு தீர்வாக அமையும் ஒரே பொருள் தேன். அதனைப்பற்றி இதில் பார்ப்போம்.
தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதோடு சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பலருக்கும் எடை அதிகரித்தல் பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுநீரில் தேனையும், லவங்கப்பட்டை சேர்த்து மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் 2 டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் லவங்க பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வர கொலஸ்ட்ரால் குறையும். தொப்பையும் வராது. இந்த குளிர் மற்றும் நோய் பரவும் காலத்தில் இருமல், சளி என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இதற்கு சுடு நீரில் ஒரு டீ ஸ்பூன் தேனை ஊற்றி அதனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட சைனஸ், சளி போன்ற பிரச்சனைகள் சரியாகும். தேன் லவங்கப் பட்டை இரண்டும் சம அளவில் எடுத்துக்கொண்டு சருமத்தில் ஏற்படும் நோய்களான சொறி, படை மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். இதனை சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு ஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேனை சுடு நீரில் கலந்து குடித்து வருவதால் சிறுநீர் குழாயில் உள்ள கிருமிகள் அழிந்து நம் உடலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும்.