ஏலக்காயின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
ஏலக்காய் பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. ஏலக்காயை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை உடனடியாக சரியாகிவிடும்.
அதேபோல் ஒருவருக்கு விக்கல் ஏற்பட்டு தண்ணீர் குடித்தும் அந்த விக்கல் நிற்க வில்லை எனில், ஏலக்காயை நசுக்கி அதனுடன் புதினா இலைகளை சேர்த்து காய்ச்சிய தண்ணீரை குடித்தால் உடனடியாக நின்று போகும். மேலும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்படுகிறது என்று நிலை வரும் பட்சத்தில், ஏலக்காயில் நான்கைந்து எடுத்துக் கொண்டு அதனை நெருப்பில் போட்டு அதில் வரும் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு முழுமையாக நீங்கும்.