எளிய முறையில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுவது பற்றிய தொகுப்பு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக சளி பிரச்சனை இருந்து வருகிறது. நம் உடலில் அதிகப்படியான சளி இருப்பதினால் வைரஸ் நோய்கள் நம்மை எளிதில் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் சளியை போக்க சில குறிப்புகள்
- ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி வெளியேறி விடும்.
- தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய பின்னர் அருந்திவந்தால் சளியை குறைக்க வழி செய்யும்.
- ஆழ்ந்த சுவாசம் செய்வதால் சுவாச பாதையில் இருக்கும் சளி உடைக்கப்பட்டு குறைக்கப்படும்.
- கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தால் சூடான காற்று நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். இது நுரையீரலை பாதுகாப்பாக வைக்கவும் உதவும்.