தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்வதால் கிடைக்கப்பெறும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு
- சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையை கட்டு படுத்தி சீராக வைக்க இஞ்சி உதவுகிறது.
- காலையில் சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி பசி உணர்வு கூடும்.
- இஞ்சியை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமடையும்.
- தண்ணீரில் சிறிய துண்டு இஞ்சியை வெட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வருவதனால் நெஞ்சு சளி நீங்கும்.
- பல்வலி இருந்தால் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வருவதால் பல் வலி பறந்து போகும்.
- வெந்நீரில் இஞ்சி மற்றும் தேன் கலந்து குடித்து வருவதனால் செரிமான பிரச்சனைகள் தீரும்.