Categories
உலக செய்திகள்

மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம்..! சீன அதிபர் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கும், தங்கள் நாட்டுக்கும் இடையே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றத்தால் மீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-ன் வீடியோ உரை வெளியிடப்பட்டது. அதில் அதிபர் ஷி ஜின்பிங் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மீண்டும் பனிப்போர் ஏற்பட எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது. மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் சர்வதேச அளவிலான வர்த்தகம் தொடர சிறந்த வழித்தடமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் சீனா பொருளாதார ரீதியான வளர்ச்சியில் சீர்திருத்தங்களை கொண்டு வர உறுதிப்பாட்டுடன் உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்வதேச கடல் வணிக வழித்தடமாக விளங்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை சீனா ஆக்கிரமித்து வருவதனை கண்டித்து அமெரிக்கா பல எதிர்ப்புகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய முத்தரப்பு கூட்டணியை ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பிற்காக அமைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதாவது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு “ஆக்கஸ்” எனப்படும் இந்த முத்தரப்பு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |