Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருத்தரை கூட விடக்கூடாது… காவல் துறையினருக்கு அறிவுரை… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களையும், சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளையும் நிறுத்தி கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இ-பதிவு முறை இருந்தால் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் மற்றும் ஊர்காவல்படையினருக்கு முக கவசம், பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கியுள்ளார். அதன்பின் நாளையில் இருந்து நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |