Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவருக்கு காலணியால் தாக்குதல்… போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை ஒரு  நோயாளியின் உறவினர் காலணியால் தாக்கியதால்  சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பயிற்சி மருத்துவரான  மாலதி  சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.இதனை மருத்துவர் மாலதி கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் மருத்துவர் மாலதியை  தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Image result for போராட்டம்

 

இதில் காயமடைந்த மருத்துவர் மாலதி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பணியிலிருந்த சக மருத்துவர்கள் பணி முடக்கும் போராட்டத்தில் இறங்கினர். தாக்குதல் நடத்திய பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |