Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடைப்பயிற்சிக்கு தடை….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

கோவையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் ரேஸ்கோர்ஸ் என்னும் பகுதியில் பொதுமக்கள் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதையடுத்து கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியை மக்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்ட நிலையில்,

மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மக்கள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இது போன்ற பயிற்சியில் ஈடுபடும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்  முக கவசம் அணியாமலும்  சுற்றி திரிவதால் கொரோனா  பரவும் அபாயம் இருப்பதால் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள தடைவிதித்து அறிக்கை ஒன்றை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருந்தார். அதில், கோயம்புத்தூரில் கொரோனா குறைந்துள்ள போதிலும், பொதுமக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். சிறு அலட்சியம் கூட இருக்கக் கூடாது.

அந்த வகையில், கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசின் முக்கிய விதி முறைகளான  சமூக இடைவெளியை கடைபிடிப்பது,  முக கவசம் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும்,

பயிற்சிகளில் ஈடுபடுபவர்களில் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை என்றும், முக  கவசம் அணியாமல் திரிவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், அரசின் மறு உத்தரவு வரும் வரை இப்பகுதியில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |