Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எல்லா சேவையும் எளிதில் கிடைக்கும்… பெண்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்… திறப்பு விழாவில் கலெக்டரின் அறிவிப்பு…!!

48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேவை மைய கட்டிடத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் திறந்து வைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறும்போது, சூலக்கரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பக வளாகத்தில் இந்த மையமானது இயங்கி வந்த நிலையில், தற்போது 48 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மையத்தின் நோக்கம் என்பது, பொது இடத்திலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகளை உடனடியாக அவசர கால அடிப்படையில் எளிதாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாகும்.

அதோடு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டு இந்த மையத்தை அணுகலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து இந்த மையத்தின் மூலம் பெண்கள் அவசர கால மருத்துவ வசதி, போலீசாரின் சட்ட உதவி, பெண்கள் பாதுகாப்புக்கான அவசர சேவை, ஆலோசனை மற்றும் தற்காலிகமாக தங்கும் வசதி போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |