கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியத்துடன் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தால் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியரான மதுசூதன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1 – 5 லட்சம் வரை கடன் பெற்றுக் குறைந்த வட்டியில், அதாவது 6.5% என 6 வருடத்திற்குள் கடனை திருப்பி செலுத்துமாறு வகுக்க பட்டுள்ளது. இந்த கடனை பெற்றுக்கொள்ள வயது வரம்பு 18 – 60 வயது வரை இருக்கலாம். மேலும் இது குறித்து தெளிவான விவரங்களை பெறுவதற்கு 04575 – 299514 என்ற தொலைபேசி எண் மூலம் அழைக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த கடன் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியரான மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.