மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவகலத்தில் வைத்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளின் துறை சார்பாக 135 மாற்றுத்திறனாளிகளுக்கு காற்றுப்படுக்கைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் அடையாள அட்டைகள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.
அப்போது 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 208 ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாரம்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த முகாமில் 150 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 120 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.