உதகை மாவட்டத்தில் குழந்தைகள் சிலர் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன உரிமையாளர்களும் உதவித்தொகை வழங்கி வருகின்றன.
இதைத்தொடர்ந்து பல சிறு குழந்தைகளும் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று முகஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது உதகை பெர்ன்ஹில் பகுதியை சேர்ந்த கீர்த்திகா 1089 ரூபாய், மிஷினரி ஹில் அப்பகுதியை சேர்ந்த தக்ஷித், மோதிகா 1115 ரூபாய், அருவங்காடு பகுதியை சேர்ந்த கவுசித் 2,265 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கியுள்ளனர். மேலும் சிறுவர்களுக்கு இன்னசென்ட் திவ்யா பாராட்டு தெரிவித்தார்.