சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் சார்பாக 75-வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர் உலகத்தின் சமாதானத்தை பறை சாற்றுகின்ற விதத்தில் வெண் புறாக்களை பறக்க விட்டுள்ளார்.
இதில் திறந்தவெளி ஜீப்பில் சென்று பார்வையிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூகநல மகளிர் உரிமை துறை, முன்னாள் படைவீரர் நல துறை உள்ளிட்ட பல துறையின் சார்பாக 250 பயனாளிகளுக்கு 25, 38, 465 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பல அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 155 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பல போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேசிய அளவில் பதக்கம் பெற்ற இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும், பாராட்டு சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறையினருக்கு கேடயங்களையும் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார்.