Categories
மாவட்ட செய்திகள்

முன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்… கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் முன்னாள் படை வீரரின் குடும்பத்தினர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஆட்சியரான ஸ்ரீதர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு இந்த கல்வி ஆண்டுக்கான இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி (விவசாயம்), பி.எட். பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற பல பாட பிரிவுகளுக்காக கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது.

இதில் விண்ணப்பிக்க முன்னாள் படை வீரர்களை சார்ந்தவர்களும், குழந்தைகளும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெற வேண்டும். முன்னாள் படை வீரருடைய அடையாள அட்டை, படை விலகு சான்றிற்கான அசல், அவரை சார்ந்தோரின் பள்ளி இறுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்வி நிலையத்தில் பெற்ற விண்ணப்பம், விதவை விண்ணப்பம் போன்றவற்றுடன் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தின் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் கடந்த வருடத்தில் பெற்ற சான்றிதழை தற்போது பயன்படுத்த முடியாது. அவ்வாறு அதனை மீண்டும் இந்த வருடத்திற்கு பயன்படுத்துபவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினுடைய 04146-220524 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |