Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணி…விரைவாக முடிக்க வேண்டும்… கலெக்டர் உத்தரவு…!!

மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் புதிதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் 200 படுக்கை வசதி, மாணவ மாணவிகளுக்கான விடுதி வசதி, செவிலியர் விடுதி, மருத்துவ பேராசிரியர் கல்லூரி முதல்வர் மற்றும் குடிமியல் மருத்துவர் குடியிருப்பு, நவீன சமையலறை கட்டிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிணவரை என அனைத்தும் கட்டப்பட்டு வருகின்றன.

இப்பணியில் தற்போது 80% முடிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அரசு மருத்துவ கல்லூரி நடைபெற்று கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பிராதான கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக்கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம், உடற்கூறியல் மற்றும் வகுப்பறை போன்றவற்றை பார்வையிட்டுள்ளார்.

அதன்பின் 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்டிடம், தேசிய நெடுஞ்சாலை முகமை மூலமாக நடைபெற்று கொண்டிருக்கும் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகளையும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்ற வருடம் 8-ஆம் மாதம் தொடங்கிய அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் அடுத்த வருடம் 2-ஆம் மாதத்தில் முடிப்பதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டிலேயே இம்மாவட்டத்தின் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |