Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டரின் அதிரடி சோதனை… லாரியை மடக்கி பிடித்த அதிகாரிகள்… கைது செய்யப்பட்ட டிரைவர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணியாக கொரோனா மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தி வரும் ஆட்சியர் நேற்று கொல்லிமலையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை மடக்கி பிரித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உடனிருந்த அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளன. மேலும் கலெக்டரின் உத்தரவின் படி காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |