Categories
மாநில செய்திகள்

மே மாதத்திற்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் – முதல்வர் உத்தரவு !

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம். கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என நம்பிக்கை அளித்துள்ளார்.

காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும். நகர பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர் , மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான் என்றும் டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் தகவல் அளித்துள்ளார். மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |