நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூற மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது தாமதமாக வந்த கண்காணிப்பாளர் கலைச்செல்வியிடம் ஏன் தாமதம் என கேள்வி கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு சரியான பதில் கூறவில்லை. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மருத்துவ கல்லூரி இயக்குனருக்கு கலைச்செல்வியை பணியிடம் நீக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு கண்காணிப்பாளர் டாக்டர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்தார். இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலைச்செல்வி மீது நிர்வாக ரீதியாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததாலும் ஆட்சியர் பரிந்துரையின் பேரிலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.