Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டது இல்லையா….? வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. கல்லூரில் அலைமோதிய கூட்டம்…!!

அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுவதற்காக ஏராளமான மாணவ மாணவிகள் அங்கு கூடினர்.  

நீலகிரி மாவட்டத்திலுள்ள  ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், தமிழ், வரலாறு, சுற்றுலா மற்றும் பி.காம், பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 18 பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடந்தது. அதன் பின் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக கட்-ஆப் மதிப்பெண்கள் மூலம் கவுன்சிலிங் நடந்தது. இதில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்தனர். இதனையடுத்து  கல்லூரியில் முதல் ஷிப்டில் படிப்பதற்கு ஆன்லைன் மூலம் அதிக மாணவர்கள் தேர்வு செய்ததால் 2-வது ஷிப்டில் காலிப்பணியிடங்கள் அதிகமாக  உள்ளன.

அதனை நிரப்புவதற்காக புதன்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பம் பெறுவதற்காக மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அங்கு கூடினர். மேலும் தங்களுக்கு  விருப்பமான பாடப்பிரிவு மற்றும் ஷிப்ட் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களை  கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இவ்வாறு 800 விண்ணப்பங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |