Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி போணும்னா…! ”இனி தேர்வு கட்டாயம்” ஷாக் ஆன மாணவர்கள் ….!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது.

Coronavirus impact on students: UGC asks universities to set up ...

இதற்கு மாணவர் மத்தியிலும், ஆசியர்கள் மத்தியிலும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க 12 பேர் கொண்ட வல்லுனர் குழுவை யுஜிசி நியமித்தது. இந்த குழு யுஜிசிக்கு சில பரிந்துரைகளை செய்தது. அதில், இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம். கல்லூரிகளில் நடைபெறும் மூன்று மணி நேரம் நடைபெறும் பருவத்தேர்வுகளை  இரண்டு மணி நேரமாக குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

Home Page

அதே போல, ஆன்லைனில் தேர்வு நடத்தலாம், அதே மாதிரி ஓஎம்ஆர் ஷீட் மூலம் தேர்வுகளை எழுதலாம் என்று பல்வேறு பரிந்துரையை யுஜிசிக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. வல்லுநர் குழுவழங்கியுள்ள பரிந்துரையை ஆலோசித்து விரிவான அறிவுறுத்தலை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் யுஜிசி தெரிவித்துள்ளது. இதனால் UGC சார்பில் இதன் அறிவிப்பானது இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |