Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்லூரி கல்வி இயக்குநர் நியமனம் ரத்து – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!!

கல்லூரி கல்வி இயக்குநர் நியமத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பூரணச்சந்திரன் என்பவரை அந்த பதவிக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் தயாரிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

மேலும், பூரணச்சந்திரன் நியமனத்தில் குறைபாடு இருக்கிறது. காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே நேரத்தில் தன்னை விட ஜூனியராக இருக்கக்கூடிய பூரண சந்திரனை நியமித்து விட்டு தனக்கு வாய்ப்பளிக்க வில்லை என்றும் கீதா தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இன்று இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி பார்த்திபன், இந்த வழக்கில் பூரணச்சந்திரன் நியமனத்தை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறார். விதி முறைகளை கடைபிடித்து முறையான நியமனத்தை அடுத்த 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Categories

Tech |