கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் வேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமிர்த லட்சுமி + 2 வகுப்பை படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் அமிர்த லட்சுமியின் குடும்ப வறுமை காரணத்தினால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக அமிர்த லட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால் போதிய பணம் கிடைக்காத காரணத்தினால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது என்ற கரணத்தின் அமிர்த லட்சுமி கவலை அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அமிர்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமிர்த லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.