Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கும் முடங்கி உள்ளனர்.

No Indian university among top 100 in prestigious QS global ...

இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது வருகின்ற மூன்றாம் தேதியோடு ஊரடங்கு நிறைவுபெறும் இருக்கும் நிலையில், கல்லூரி திறப்பு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் . ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும், செப்டம்பரில் புதிதாக சேர்வோருக்கும் வகுப்பு தொடங்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. கல்லூரி எப்போது திறக்கும் என்ற குழப்பம் யுஜிசி அறிவிப்பால் நீங்கியது.

Categories

Tech |