Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அதனால தான் கொன்னுட்டேன்” பேராசிரியைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதல் தகராறில் திருமணமாகாத கல்லூரி பேராசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதா தனது அறையில் கடந்த 9-ஆம் தேதி மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூர்மையான ஆயுதத்தால் அனிதா குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாயக்கன் பேட்டை பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது திருமணமாகாத அனிதாவிற்கு சுதாகருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனிதா சுதாகரை வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் அனிதாவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுதாகரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |