Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த வாகனமும் செருப்பும்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்… மரணத்தின் மர்மத்தை ஆய்வு செய்யும் போலீசார்…!!

கல்லூரி மாணவர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்று விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி விடுமுறை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் இருந்து லோயர்கேம்ப் செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய தந்தையான முருகன் மற்றும் குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து பாண்டியனின் இருசக்கர வாகனம் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் நின்றதாகவும் ஒரு ஜோடி செருப்பு அதனுடன் கிடப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது அது பாண்டியனுடையது தான் என்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாண்டியன் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் பாண்டியனை ஆற்றல் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு பின் முல்லைப் பெரியாற்றில் பாண்டியனின் உடல் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர். அதன்பின் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் பாண்டியன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை வேறு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |