Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது.

Image result for கிணற்றில் குதித்து தற்கொலை

இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாணவி பிரியங்கா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதோடு தப்பியோடிய இளைஞனையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |