Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோ தானம் செய்ய சென்ற குடும்பம்… குளிக்கும் போது மகனுக்கு நேர்ந்த நிலை… கதறி அழும் பெற்றோர்…!!

கல்லூரி மாணவன் பாபநாசம் தலையணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர்களுக்கு யோக மணிகண்டன் என்ற ஒரு மகன் இருந்தான். இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைத்திலிங்கம் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு கோ தானம் செய்வதற்காக சென்றபோது யோக மணிகண்டன் தனது நண்பர்களுடன் பாபநாசம் தலையணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யோக மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |