டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரக்கான பள்ளி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முரளி என்ற மகனும், அஸ்வினி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முரளி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக முரளி சென்றுள்ளார். அதன்பின் முரளி விளையாட சென்றபோது, அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் டிராக்டரில் சென்று முரளியை அதில் ஏறும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து டிராக்டரில் முரளி ஏற முயன்ற போது திடீரென பிரதீப் வண்டியை இயக்கியதால் நிலை தடுமாறி முரளி கீழே விழுந்து விட்டார். மேலும் அவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதால் முரளி படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முரளி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.