Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….? இளம் பெண்ணிடம் சில்மிஷம்…. ஓடும் ரயிலில் துணை ராணுவ வீரனின் செயல்….!!

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த துணை ராணுவப்படை வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சார்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் பைஜூம் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் துணை ராணுவப் படையில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ருவிட்டு விடுமுறை முடிந்ததால் மீண்டும் பணிக்குத் திரும்ப கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்டுள்ளார். அதே ரயில் பெட்டியில் சென்னையில் தனியார் கல்லூரியில் சேருவதற்காக 19 வயதுள்ள ஒரு பெண் தனது பெற்றோருடன் பயணித்திருக்கிறார்.

அப்போது நள்ளிரவு 2 மணிக்கு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் துணை ராணுவப்படை வீரர் பைஜூம் சில்மிஷம் செய்துள்ளார். இதனை அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறியதால் ரயில் காட்பாடி வந்தவுடன் காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரயில்வே காவல்துறையினர் பைஜூமை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |