திருநெல்வேலி அருகே கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனகுமாரி. இவரது மகள் ரேவதி. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் TALLY என்ற பயிற்சி வகுப்புக்கும் சென்று வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோர்கள் எங்கு தேடியும் மாணவியை காணாததால் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் எனது மகள் எனது சொந்த ஊரிலுள்ள உறவினர் ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததாகவும், அவரே என் மகளை கடத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மாணவி கடத்தப்பட்டாரா அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.