கல்லூரி மாணவன் திடீர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவியரசன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கவியரசனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்த கரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.