Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க… புது வருஷத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம்.

கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் முடிந்தவரை கலந்து கொள்ள வேண்டும். அதே சமயம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரியரிடம் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் பாடல்கள் தொடர்ச்சியாக இருக்கும். இதற்கு பெற்றோர்களின் ஒப்புதல் அவசியம். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

பல மாதங்கள் வீட்டிலேயே இருந்து பாடங்கள் பயின்றதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். எனவே மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கபட்ட பின்னரே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை. தொடர்ச்சியாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் மார்ச் 17 முதல் 30ம் தேதி வரை 10 மற்றும் 12ம் வகுப்புக்கு தீவிர கட்டுப்பாட்டுடன் பொது தேர்வு நடத்தப்படும்.

கல்லூரிகள் திறப்பு பொருத்தவரை இறுதியாண்டு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். காலை மற்றும் மாலை என இரண்டு சிப்ட் முறைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும். விவசாயம் மற்றும் மீன்வளத்துறை கல்லூரிகளிலும் ஜனவரி 1-ஆம் தேதி கல்லூரிகள் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாமாண்டு அதற்கு மேற்பட்ட வகுப்பினருக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் பிரிவுகள் கடந்த நவம்பர் முதல் திறக்கப்பட்டன. 30க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். 2 செமஸ்டர் தேர்வு முறை தற்போது அமலில் இருக்கும் சூழலில் ஒரே ஆண்டில் 3 செமஸ்டர்களை அமல்படுத்துவது பற்றி ஆராயுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |