தமிழகத்தில் இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர்-7 இல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகுப்புகளும் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.