Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி திறந்தாச்சு…! ”எல்லாரும் காலேஜ் வாங்க”…. மிக மிக முக்கிய உத்தரவு…!!

அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும் ஏற்கனவே செயல்படத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் அனைத்து கல்லூரிகளையும் திறந்து வகுப்பு நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரான லட்சுமி நாராயண ரெட்டி செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். அதன்படி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின்படி புதுச்சேரியில் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளும் நாளை (புதன்கிழமை) முதல் செயல்படும். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும். அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்லூரிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அரசின் நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |