கொலம்பியாவைச் சேர்ந்த பெண் நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டார்.
தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்தவர் 51 வயதான Martha Sepúlveda. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் Lou Gehrig’s எனப்படும் amyotrophic lateral sclerosis நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதில் “என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் முழு உரிமையாளர் கடவுள் தான். அவரின் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடக்காது. நான் எடுத்திருக்கும் இந்த முடிவானது பலருக்கு தவறாக தெரியும். நான் படுத்த படுக்கையாக இருக்க விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் முதன்முதலாக தன்னுடைய கட்டை விரலில் ஏற்பட்ட பலவீனத்தை அறிந்த Martha உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார். இதனை தொடர்ந்து அவரால் பேனா, கம்ப்யூட்டரின் Mouse போன்ற பொருள்களை எடுத்து வைப்பதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் Marthaவிற்கு நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு தசைகள் பலவீனமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது. இதனால் அவருக்கு இறந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. குறிப்பாக 1997 ஆம் ஆண்டு தான் தென் அமெரிக்கா நாட்டில் கருணைக்கொலை செய்வதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதனை 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு ஒழுங்குமுறைப்படுத்தியது. இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி கொலம்பியா அரசு இச்சட்டத்தை திருத்தி அமைத்தது. அதில் நோயாளிகள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலோ, நோய் தீவிரமாக இருந்து குணப்படுத்தமுடியாத நிலையில் அவதிப்படுபவர்களாக இருந்தால் மட்டுமே கருணைக்கொலை அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த Martha Sepúlveda கருணைக்கொலைக்கு பதிவிட்டு அனுமதி பெற்றுள்ளார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் உள்ளார்.
அவர் கூறியதில் “நான் என்னுடைய தாயை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு என் அம்மா வேண்டும். ஆனால் இனி அவர் என்னுடன் இருக்க போவதில்லை என்று தெரியும். அதனால் என்னால் முடிந்தவரை அவரை நான் மகிழ்ச்சியாக வைப்பேன், சிரிக்க வைப்பதில் முழுக்கவனம் செலுத்துவேன்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரமான 7 மணிக்கு அவர் கருணை கொலை செய்யப்படவுள்ளார். இந்த தேதியையும் அவர் தான் முடிவு செய்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.