Categories
உலக செய்திகள்

கொலம்பஸ் சிலையில் பூசப்பட்ட சாயம்…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்….!!

பிரிட்டனில் கொலம்பஸ் சிலையின் மேல் சிவப்புநிற சாயம் பூசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பிரிட்டன் நாட்டில் மிக பழமை வாய்ந்த கொலம்பஸ் சிலையின் மீது சிவப்புநிற சாயம் பூசப்பட்டுள்ளது. மேலும் கொலம்பஸ் சிலையின் பீடத்தில் 1446 முதல் 1506 ஆம் ஆண்டு வரை கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு பற்றி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் மீதும் சிவப்புநிற சாயம் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் லண்டனின் பக்கிங்காம் அரண்மனையின் அருகில் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள கொலம்பஸ் சிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலம்பஸ் மூலம் வந்த ஐரோப்பியர்களால் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க நாட்டின் பல நகரங்களில் கொலம்பஸ் தினமன்று பூர்வகுடிகளை கௌரவிக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Categories

Tech |