கோமாளிகள் தினமானது பெரு நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது.
கோமாளிகள் ஒன்றிணைந்து முகங்களில் வண்ணம் பூசிக் கொண்டு, தலையில் விக்குகள் மற்றும் நீளமான காலணிகளை அணிந்து கொண்டு பேரணியாக சென்றிருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் மக்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் எழுப்பினார்கள்.
அந்த கோமாளிகள், மக்களை மகிழ்விப்பது தான் எங்களது கலை என்று கூறியதோடு வேலை சுமை போன்ற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களை நாங்கள் நீக்குவதாக கூறி இருக்கிறார்கள். அதாவது, Toni Perejil என்னும் பிரபல கலைஞரின் நினைவாக ஒவ்வொரு வருடமும் கோமாளிகள் தினம் அந்நாட்டில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.