Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு செய்தது ,  கைது செய்தது.

இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பதவியில் சேகர் ரெட்டி நியமனம் செய்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சேகர் ரெட்டி மீதான 2_ஆவது , 3_ஆவது FIR இரத்தாகிய நிலையில் தற்போது அவர் மீதும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சேகர் ரெட்டி மீது முதல் FIR நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |