Categories
ஆன்மிகம் இந்து

எது செய்தாலும் தடை வருகிறதா…? தீர்வு இதோ நம் விநாயகர் இருக்கிறாரே…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

நாம் செய்யும் செயல்களில் உள்ள தடைகளை அகற்ற அவ்வையார் பாடிய “விநாயகர் அகவல்” என்னும் பாடலை 48 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு விளக்கேற்றி பூஜை செய்து தொடர்ந்து பாடுங்கள். ஓம் கணேசாய நம அல்லது ஓம் சக்தி விநாயக நம என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து பின்னர் அன்றாட பணியில் ஈடுபடுங்கள் . உங்கள் செயல் நன்றாக நடந்து முடியும். நீங்கள் தொடங்கும் காரியமும் நல்லதாகவே அமையும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Categories

Tech |