Categories
அரசியல் மாநில செய்திகள்

என் பக்கத்துல உக்காருங்க..! மோடி அப்படி சொல்லல… ஆதாரம் கேட்ட அண்ணாமலை ..!!

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று இலவசமாக தருவோம் என்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்ன ? நீங்கள் அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் என விமர்சித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னது குறித்து கேள்வி எழுப்பபட்டது.

அதற்க்கு பதிலளித்த அவர், நீங்கள் இன்றைக்கு எனக்கு காமிங்கள், அந்த வீடியோவை எனக்கு காமியுங்கள். எங்கேயாவது சொல்லி இருக்காரா ? என்று காமியுங்கள். நான் என் அலுவலகத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். மோடிஜி வாயிலிருந்து அது வந்ததை என்னிடம் காட்ட வேண்டும். இல்லாட்டி நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அடுத்த பிரஸ்மீட்டில் நீங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அந்த வீடியோ உண்மை என்றால்,  அடுத்த பிரஸ் மீட்டில் நான் அதற்கு காரணம் சொல்கிறேன். எத்தனை நாளைக்கு இதே பொய்யே தமிழ்நாட்டில் திரும்பத்திரும்ப சொல்வீர்கள். கண்டிப்பாக இல்லை எங்கிருந்து அனுப்பப் போகிறீர்கள்? நான் அலுவலகத்தில் தான் உட்கார்ந்து இருப்பேன். நீங்கள் அடுத்த பிரஸ்மீட்டில் என் பக்கத்தில் உட்கார வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |