வாய்ப்பு கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக்குங்க என்று நகைச்சுவை நடிகர் சூரி பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கோரணா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி தனது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.” என்று பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CPGPpAbBPqO/?utm_medium=copy_link