அர்ஜென் டினாவில் நாயுடன் செலஃபீ எடுக்க முயன்ற போது நாய் முகத்தை கடித்துத்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் வளர்ப்பு பிராணி களை வைத்து அதனுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகி ராம், டுவிட்டரில் பதிவேற் றம் செய்கின்றனர். அர்ஜென் டினாவைச் சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத வித மாக நாய் அவரது முகத் தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாய மடைந்த அவருக்கு மரு த்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப் பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணை யத்தில் பகிரப்பட்டு வரு கிறது.