Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரையும் மீறி வந்துருக்கோம்….! கண்டிப்பா உத்தரவு வாங்கணும்…! எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பதால் பல குடிமகன்கள் மாநிலம் விட்டு மாநிலம் மது வாங்கச் செல்கிறார்கள். இது சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இங்கு மதுக்கடைகளை திறக்கின்றோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

 

களமிறங்கிய மக்கள் நீதி மய்யம்:

கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 44 நாட்களுக்கு பின் கடைகள் திறக்கப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனையடுத்து 8ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் மதுக்கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை, நீதிமன்ற நிபந்தனை மீறப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் கடையால் கொரோனா பரவக்கூடும் எனவே அதனை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்த்தது.

மதுக்கடையை மூட உத்தரவு:

மேலும் டாஸ்மாக் கடையில் உயர்நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதற்கான ஆதாரங்களும் அடுக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த நீதிபதிகள் பொது முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

 

மேல்முறையீடு:

டாஸ்மாக் மதுக்கடை வருவாய் தமிழக அரசின் பெரும் நிதி வருவாயாக இருக்கின்றது.  இதனால் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தலையில் விழுந்த இடியாகவே இருந்தது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகளே டாஸ்மாக் மதுக்கடைகளை எதிர்த்தும் கூட தமிழக அரசு திறந்தது. அதே போல கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலை மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று ( 15/05 ) விசாரணைக்கு வருகிறது.

 

சிக்கலில் அரசு:

பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி கட்சிகளே எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளதால் இதன் தீர்ப்பை அரசுக்கு சாதகமாக வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயமான சூழல் எழுந்துளது. இது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை அதிமுக அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகின்றது. இல்லை என்றால் கூட்டணி கட்சியை மீறி நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பையும் கோட்டை விடும் நிலைக்கு தள்ளபடும் என்பதால் நாளை விசாரணை அதிமுகவுக்கு திக் திக்காகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

முக்கிய வாதங்கள்:

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசு பெரும் வருவாய் இழப்பை சந்திக்கும். அதேபோல வர்த்தக பணிகளும் பெரிய அளவில் பாதிக்கும் . உச்சநீதிமன்றமே கூட தெளிவாக சொல்லி இருக்கிறது தனது தீர்ப்பில் மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

 

45 நாட்களுக்கு பிறகு திடீரென மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தான் முதல் நாள் ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு கடைக்கு வந்து இருக்கிறார்கள். அடுத்த நாளே நிலைமையை சீர் செய்யப்பட்டு விட்டது. டாஸ்மார்க் கடைகள் தமிழகத்தில் தொடர்ந்து இயங்க கூடியது தான். தமிழக அரசே நடத்த கூடிய மதுபான கடைகள் தான். எனவே மதுபான கடைகளை தொடர்ச்சியாக இயங்கு வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.கொரோனா பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் நாங்கள் கடைகளை திறக்க வில்லை என்று தங்கள் தரப்பு வாதங்களை தமிழக அரசு முன்வைக்கும்.

 

அரசுக்கு ப்ளஸ் பாண்ட்:

இதில் அரசின் வருமான இழப்பு என்பது கண்டிப்பாக வைக்கப்படும். அது மட்டுமல்லாமல் வர்த்தக போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாகவும் சொல்வார்கள். உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு மிக முக்கிய மிக முக்கியமான ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். மதுபான கடைகள் திறப்பது என்பது அந்தந்த அரசுகளின் நிலைபாடு சார்ந்தது. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற விஷயத்தை  சொல்லி இருந்தார்கள் இது தமிழக அரசுக்கு சாதகமான விஷயமாக இருக்கும்.

 

இதனால் தான் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கடை திறந்ததால் அதிகமான கூட்டம் வந்தது. அடுத்த நாளே நாங்கள் நிலைமையை சீர் செய்து விட்டோம் என்று. அண்டை மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக எங்கள் மாநில மக்கள் சென்று வந்தார்கள். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே உரசல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்தது. இத்தகைய காரணங்களால் தான் இந்த மதுபான கடைகளை திறந்து இருக்கிறோம் என்று ஆணித்தரமான வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |