மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இழப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இ பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதைதொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் கடும் ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தால் தான் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.