நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுந்த கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கவுண்டிபாளையத்தில் கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமுதா(41) என்ற மனைவியும், வர்ஷினி(19), நந்தகுமார்(17) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா கடந்த மாதம் தனது மகள் மற்றும் மகனுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கணேசன் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அமுதா வீட்டிற்கு வர மறுத்ததால் கணேசன் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். மேலும் விரக்தி அடைந்த கணேசன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.